நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் எச்சரித்துள்ளார்.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ இதுகுறித்து கூறுகையில், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதும், பணவீக்கம் அதிகரிப்பதும் வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்களுக்கு விநியோகத்தை நிலையாகப் பேண முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் நோயாளிகள், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் தொற்றா நோயாளிகள் ஆகியோர் இந்த மருந்துத் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில மருந்துகளின் பதிவு தாமதம், அரச விலைக் கட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதி செய்ய விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுதல், மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்த நெருக்கடிக்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனால் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகள் அதிக செலவில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை தனிப்பட்ட முறையில் கொண்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாட்டின் சுகாதார சேவைகள் மற்றும் நோயாளி பராமரிப்பு முறைமைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.






3 Comments