Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு குறித்து அறிவிப்பு!

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருவதாகவும் இந்த மாதம் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 11 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாகக் கூறிவிட்டு நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...