Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

8 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியுள்ளன இது 2024 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.

2026 மார்ச் மாதத்தில் இந்த நேர்மறையான போக்கில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டதுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது ஏப்ரல் மாதத்தில் 117,893 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் நிறைவடையும் போது சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை 858,527 ஐ எட்டியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும் என அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...