நாட்டில் எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிச் சூழ்நிலை காரணமாக இந்த நிலைமை உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றியபோது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் மக்களுக்கு தேவையான மானியங்கள் வழங்கப்படும் எனவும் அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படவிருந்த போதிலும், அது இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments