Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை நீதிமன்றம் உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு பொலிஸார்  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று, இருவரும் நாட்டைவிட்டு வெளியே செல்வதைத் தடுக்கும் வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குக் கொழும்பு மேலதிக நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.Â

மேலும், சுட்டுக்கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரியசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இன்னும் நீதிமன்றத்தில் குறித்த தந்தை மகனுக்கு எதிராக நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை 10 பேரிடம் சாட்சியம் பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தந்தை மற்றும் மகனுக்கு வெளிநாட்டு பயணத்தடை நீதிமன்றம் உத்தரவு!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...