எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், பேருந்துக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் NTC தெரிவித்துள்ளது.






3 Comments