ஹபராதுவ பகுதியில் இன்று (3) ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குவட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப விசாரணைகளின்படி, இருவரும் அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர். மின்னல் தாக்கிய போது அவர்கள் தங்களது வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments