லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் எரிபொருள் விலைத் திருத்தங்களை அறிவித்துள்ளன.
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) புதிய விலைத்திட்டத்துக்கு ஏற்ப விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் CPC விலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகள் எந்தவித மாற்றமுமின்றி பழைய முறைப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments