இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கணினி மற்றும் கைப்பேசி ஊடுருவல் மோசடிகளில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கணினி அறிவு மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு குறைவாக உள்ளவர்கள் இவ்வாறான மோசடிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் கணக்குகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவசர பணத் தேவை இருப்பதாகக் கூறி போலியான செய்திகளை அனுப்பி, அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து இலட்சக்கணக்கான ரூபாய்களை வங்கி கணக்குகளுக்கு மாற்றச் செய்கிறார்கள்.
இதுவரை இவ்வாறான பல சம்பவங்களில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.






3 Comments