Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சர்வதேச பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவன் சாதனை!

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற சமோவா ஐபிபிசி யூனிவேர்சல் வெயிட்லிபிட்டிங் கப் 2026 பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும் யாழ். இந்துக்கல்லூரி மாணவருமான பரமலிங்கம் தாரகன் கனிஷ்ட பிரிவின் +110Kg எடைப்பிரிவில் இலங்கை சார்பாகப் போட்டியிட்டார்.

நேற்றுமுன்தினம் மே 1ம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் இவர் 98Kg ஸ்னாட்ச் முறையிலும் 132Kg கிளீன் அண்ட் ஜெர்க் முறையிலும் என மொத்தமாக 230Kg எடையைத் தூக்கினார் இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக் கொடியை ஏந்தி தனது திறமையால் பதக்கம் வென்ற இம்மாணவனுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இன்டர் மிலான் Inter Milan அணி, தனது முக்கிய ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று Serie A கால்பந்து பட்டத்தை கைப்பற்றியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி, மிலனில் உள்ள புகழ்பெற்ற San Sir...

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஏசியன் த்ரோவிங் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.இப்போட்டிய...

இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு கிரிக்கெட்டில் ஒழுக்கங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கி...