தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான கம்பன் விழா நிகழ்வில் நேற்று பிற்பகல் வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார் சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
இலக்கியம் நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments