Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இலஞ்சம் பெற்று தப்பிச் சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தகர் கைது!

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி பேலியகொடை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவிப்பதற்காக இலஞ்சமாக 2 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதுடன் மற்றைய கான்ஸ்டபிள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

தப்பிச் சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று முற்பகல் 9.40 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...