Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

உலக வங்கி இலங்கை குறித்து வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இலங்கை 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகமாக வளர்ச்சி கண்டிருந்தாலும், மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பகுதி தற்போதும் வறுமையில் அல்லது மீண்டும் வறுமைக்குள் செல்வதற்கான கட்டத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கி பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் Sri Lanka Development Update என்ற இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நிலை சிறப்பாக இருப்பதாகவும், 2024 இல் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவுக்கப்படுகின்றது.

இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 4.4% வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக தொழில்துறை மற்றும் சேவைத் துறைகள், குறிப்பாக கட்டிடத் துறை மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும், உலக வங்கி எச்சரிக்கையின்படி, இந்த வளர்ச்சி எல்லோருக்கும் சமானமாக பயனளிக்கவில்லை.

குறிப்பாக வறுமையில் வாழ்பவர்களுக்கு ஊடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வறியவர்களுக்கு உதவும் கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்பாராத வர்த்தகக் கொள்கை மாற்றங்கள், மற்றும் உள்ளக கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இலங்கையின் வளர்ச்சி 3.5% வரை குறைவடையும் என இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி இலங்கை குறித்து வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...