அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , மாதாந்த எரிபொருள் கொடுப்பனவை 2,250 லீற்றரிலிருந்து 900 லீற்றராகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ள்ர்.
ஜனாதிபதியின்அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அறிவிப்பு Â ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.






3 Comments