கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, வட மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னம் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளபடுகின்றது.






3 Comments