Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம்!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம் நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம்!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...