மதுபானமும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று இதுவரை காலமும் பிழையான எண்ணத்தை பிமல் ரத்நாயக்க கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கடும் ஆவேசத்துடன் பேசிய பிமல் ரத்நாயக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி மதுபானமும் பணமும் வழங்கி தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு தெரியவில்லை இலங்கை தமிழரசுக் கட்சி சாத்வீகக் கட்சி மாத்திரமில்லை சமூக அக்கறையுள்ள கட்சியுமாகும் என்றும்.
75 ஆண்டுகளுக்கு மேலான தமிழரசுக் கட்சியின் வரலாற்றை அமைச்சர் பிமல் ரத்நாயக்க எடுத்துப் பார்க்க வேண்டும். மது ஒழிப்புக்காக இயக்கைக் கொண்டுள்ளதுடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது என்றும்.
அதனால்தான் மதுபான சாலைகளை புதிதாக அமைப்பதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் நீதிமன்றங்கள் ஊடாக அவற்றை தடுக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.






3 Comments