ரம்பொட, கரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் வைத்து இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து வீதியில் இருந்து விலகி சரிவில் கவிழ்ந்தது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






3 Comments