இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடரின், முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணித் தலைவர் சுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இறுதியாக நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக 8 இன்னிங்சில் 4 சதங்களுடன் (இதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்) 722 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதேவேளை இன்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை 15 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய துடுப்பாட்ட வீரர் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்.
கவாஸ்கர் 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 732 ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்தார்.
இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் 737 ஓட்டங்களை பெற்று கவாஸ்கரின் முறியடித்துள்ளார்






3 Comments