அமெரிக்க ஓபன் டென்னிஸ் எதிர்வரும் 24 ஆம் திகதி தொடங்கும் நிலையில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகியுள்ளார். மெடிக்கல் காரணமாக அவர் விலகவில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். “ஏடிவி மாஸ்டர்ஸ் 1000” தொடரில் 45 – 12 சாதனையை ஜோகோவிச் வைத்துள்ளார்.
கடந்த மே மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற தொடரை வென்று 100 ஆவது டூர் – லெவல் டைட்டிலை கைப்பற்றினார். அதன்பின் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதி வரை முன்னேறினார். இரண்டு அரையிறுதி போட்டியிலும் சின்னரிடம் தோல்வியடைந்தார்.
சின்சினாட்டி தொடரில் விளையாடாத நிலையில், அடுத்து அமெரிக்க ஓபனில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments