Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பங்களாதேஷில் நடைபெற்ற CAVA Cup for Men 2025 சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்.டி.எம். தஹீர்!

பங்களாதேஷில் நடைபெற்ற CAVA Cup for Men 2025 சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்ற எம்.டி.எம். தஹீர் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை சமாதான தூதரும், மன்னார் மாவட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.

மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்தவரும், புத்தளம் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான முஹம்மது தஹீர், தனது சிறப்பான ஆட்டத் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “Best Player of the Match” விருதையும் வென்று தனிப்பட்ட சாதனையையும் புரிந்துள்ளார்.

எமது தாய் நாட்டின் பெயரை உயர்த்திய தஹீர் அவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கை மேலும் சிறக்க — எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள் மற்றும்  பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஷேக் அமானி மேலும் தனது வாழ்த்துச் செயதியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சாதனைகளை மேலும் படைப்பதற்கான தைரியத்தையும் உடல் வலிமையையும் அவருக்கு இறைவன் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் மேலும் சுட்டிக்காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Â


Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இன்டர் மிலான் Inter Milan அணி, தனது முக்கிய ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று Serie A கால்பந்து பட்டத்தை கைப்பற்றியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி, மிலனில் உள்ள புகழ்பெற்ற San Sir...

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஏசியன் த்ரோவிங் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.இப்போட்டிய...

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற சமோவா ஐபிபிசி யூனிவேர்சல் வெயிட்லிபிட்டிங் கப் 2026 பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென...