சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஒலிம்பிக் போட்டிகளில் பெண் பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாக பெண் என்று உறுதிசெய்யப்படுபவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என மரபணு சோதனை (SRY gene test) மூலம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த புதிய விதி மூன்றாம் பாலின தடகள வீரர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவதை முற்றுமுழுதாகத் தடை செய்யும் வகையில் அமையும். விதி 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் (LA2028) ஒலிம்பிக்கில் முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும்.
IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி கூறியதாவது:
"ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் சில விளையாட்டுகளில் இது பாதுகாப்பற்றது."
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ஏற்பட்ட பாலின சர்ச்சைகள் மற்றும் 18 மாத ஆலோசனைகள் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் LGBTQ+ அமைப்புகள் இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த பெப்ரவரி 2025ல் கையெழுத்திட்ட “Keeping Men Out of Women's Sports” உத்தரவை முன்னிட்டு, அமெரிக்காவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை போட்டிகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் பிரிவில் பங்கேற்பதை தடை செய்துள்ளார். டிரம்ப் கூறியதாவது:
"பெண்கள் விளையாட்டில் ஆண்களுக்கு இடமில்லை."
IOC-இன் புதிய விதிமுறை, டிரம்பின் கொள்கையை உலகளாவிய அளவில் வலுப்படுத்தும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.






3 Comments