Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கொழும்பில் படமாக்கப்பட்ட சூர்யாவின் திரைப்படத்தில் நடித்த நடிகர் திடீரென உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்தோட்ட வீதியில் வசித்து வந்த திருமணமாகாதவரான வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்திய நாடாளுமன்றத்தை சித்தரிக்கும் படப்பிடிப்பை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா மற்றும் பல இந்திய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருகை தந்துள்ளனர்.

இதன்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேடமிடத் தயாராகிக் கொண்டிருந்த நபர் கழிவறைக்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த அவரை உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார் 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்...