கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்த் மருத்துவர் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், “தர்மன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஸ்வாக் மோட் (SWAG Mode) ஆன்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இடம்பெற்றுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்தும் இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. சூப்பர் ஸ்டார் அற்புதமாக இருந்தார்” என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.






3 Comments