Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

2025 IPL போட்டியில் 14 வயதில் சதம் அடித்து சாதனை!

நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார்.பீகாரில் பிறந்த இந்த இளம் வீரரான இவர் தனது 14 வயதிலேயே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

சூரியவன்ஷியின் கிரிக்கெட் பயணம் நான்கு வயதில், தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது.


சூர்யவன்சி 12 வயது சிறுவராக இருக்கும் போதே பீகாரின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக வினூ மன்கட் கோப்பையில் விளையாடினார்.

2024 இல், 12 வயதில் மும்பைக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார்.

இதன் மூலம், பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய இரண்டாவது இளம் வயது வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக நான்காவது இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதன் போது முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் (15 ஆண்டுகள் 57 நாட்கள்) சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற IPL போட்டியில் 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்படி, வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார்.

குறித்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சூர்யவன்ஷின் சதத்துடன் குஜராத்தை வீழ்த்திய ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இன்டர் மிலான் Inter Milan அணி, தனது முக்கிய ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று Serie A கால்பந்து பட்டத்தை கைப்பற்றியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி, மிலனில் உள்ள புகழ்பெற்ற San Sir...

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஏசியன் த்ரோவிங் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.இப்போட்டிய...

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற சமோவா ஐபிபிசி யூனிவேர்சல் வெயிட்லிபிட்டிங் கப் 2026 பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென...