Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

முதல்வருக்கு இளையராஜா நன்றி!

அந்த கடிதத்தில் ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திரத்தின்படி, கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, திருமலை வான்வழியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பிரிட்டனில் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தை பகிர்ந்துகொண்டார். நுழைவாயிலில் வந்து வரவேற்ற இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

தொடர்ந்து, இளையராஜா தனது கைப்பட எழுதிய Valiant சிம்பொனி இசைக்குறிப்புகளை முதல்வரிடம் காண்பித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

முதல்வருக்கு இளையராஜா நன்றி..
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில்வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் தன்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன என்றும், மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...