Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மேடையில் கண்கலங்கி பேசிய நடிகர் சிம்பு!

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனை - சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்துள்ளனர்.

நேற்று மாலை இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. படக்குழுவினர் அனைவரும் மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதில் நடிகர் சிம்பு தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மணி ரத்னம், கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். பின் தன்னுடன் நடித்தவர்கள் குறித்தும், தனது ரசிகர்களை பற்றியும் பேசினார்.

ரெட் கார்டு பிரச்சனை பேசிய சிம்பு, "என் மேல ரெட் கார்டு போடுற சூழல் வந்தது. அப்போது என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயந்தாங்க. அப்போ என்னை அழைத்து எனக்கு செக்க சிவந்த வானம் படத்தை கொடுத்தவர் மணி ரத்னம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் சார். ரொம்ப நன்றி" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

பின் தனது தாய் மற்றும் தந்தை குறித்து பேசிய சிம்பு, "எனது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தர் இருவருக்கும் என்னுடைய நன்றி. பிறந்ததில் இருந்து எனக்கு நடிக்க சொல்லிக்கொடுத்து, ஒரு பக்கம் படிக்கணும் மறுபக்கம் நடிக்கணும், ஏன் என்னை இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க என்று நினைப்பேன். ஆனா இன்னிக்கி ஒரு 40 வருஷம் கழிச்சு கமல் சாரோட நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு" எனவும் கண்கலங்கி பேசியுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...