Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

நடிகை சரோஜா தேவி காலமானார்!

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.ம்.ஜி.ஆர். உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.

50 ஆண்டுகால திரை வாழ்வில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.விஜய்யுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தார்.கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

இவரது நடிப்பிற்காக பத்ம பூஷன்,பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றார். 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றிருந்தார்.

இவருக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. இவருக்கு இந்திரா, கவுதம் ராமசந்திரன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...