ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23ஆவது திரைப்படம் மதராஸி.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
இப் படத்தின் முதல் பாடலான 'சலம்பலா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் சுப்புவின் வரிகளுக்கு சாய் அபயங்கர் குரல் கொடுத்துள்ளார்.
இப்பாடலின் ப்ரோமோ காணொளி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மதராஸி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments