Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்ரன்!

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

நடப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் தனித்துவம் காட்டி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இதன் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்த சிம்ரனின் முதல் படமே தோல்வியை சந்தித்தது. 

இதையடுத்து, கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். பின்னர், ’நேருக்கு நேர்’ , ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’, ’பிரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’, ‘ரமணா’ மற்றும் பல படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இடுப்பழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்ரன் 2000-ஆம் காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகும் வலம் வந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் என டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். நடிகை சிம்ரன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சிம்ரன் கடந்த 2003-ம் ஆண்டு தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு சிறிது இடைவெளிவிட்ட சிம்ரன் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் ரீ எண்ட்ரி கொடுத்தார். பின்னர், சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ’டூரிஸ்ட் பேமிலி ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் தனது யதார்த்த நடிப்பினால் திரை உலகில் சிம்ரன் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழ் சினிமா கொண்டாடி வரும் நடிகைகளில் ஒருவரான சிம்ரன் தற்போது முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார். தயாரிப்பு மட்டுமின்றி படத்தில் நடிக்கவும் உள்ளார்.

‘போர் டி மோசன் பிக்சர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் சார்பில் திரில்லர், ஆக்சன் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தினை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷியாம் இயக்குகிறார். படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். படத்தில் தேவயானி, நாசர் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...