விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் தொடர் முத்து என்கிற காட்டான் இதை காக்கா முட்டை மணிகண்டனும் பி.அஜித்குமாரும் இணைந்து இயக்கியுள்ள நிலையில் .
இதில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம் புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ள இந்த டார்க் காமெடி வெப் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 27-ல் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில் மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை சொன்ன போது 6 பக்கங்களைக் கொண்ட சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்பவர்கள் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன் இந்த வெப் தொடருக்கு மது நீல கண்டன், என்.ஷண்முக சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார் .






3 Comments