விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (30) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவர் சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, விஜய் தன்னிடம் 404.58 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 220.15 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவரது மனைவி சங்கீதா விஜய் பெயரில் 15.51 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விஜய் தனது பெயரில் 883 கிராம் தங்கம் வைத்திருப்பதுடன் சங்கீதா பெயரில் 3,132 கிராம் தங்கமும் 134.91 கரட் வைரங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள கடன் விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் – ரூ. 3.02 கோடி ,தாய் ஷோபா சந்திரசேகர் – ரூ. 87.12 லட்சம், மனைவி சங்கீதா – ரூ. 12.6 கோடி, மகன் ஜேசன் சஞ்சய் – ரூ. 8.78 லட்சம், மகள் திவ்யா சாஷா – ரூ. 4.6 லட்சம் விஜய் தனது தொழிலை சுயதொழில் (Self-employed) எனக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






3 Comments