கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் வயது முறையே 19 மற்றும் 18 ஆகும். விபத்து, வீதியில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது பின்னால் சென்ற உந்துருளி மோதி ஏற்பட்டது.
இரு உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை முடிந்தவுடன் உறவினருக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






3 Comments