கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறையின் காரணமாக சிகிச்சைப் பெற வரும் பொதுமக்கள் கடும் அசோகாரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பயன்படுத்தும் பிரதான மருத்துவமனையாக இது காணப்படுகின்ற நிலையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் காணப்படும் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்பொண்டு வருகின்றனர்.
நீண்ட தூரங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மருந்து பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அசெளகரியங்களை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






3 Comments