முறைப்பாட்டாளர் கொள்வனவு செய்த புதிய மோட்டார் சைக்கிளை கடந்த 8ஆம் திகதி இலக்கத் தகடுகள் இன்றியும் வருமான அனுமதிப்பத்திரம் இன்றியும் செலுத்திய குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக 10,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார் அவ்வளவு பணத்தை வழங்க முடியாது என முறைப்பாட்டாளர் தெரிவித்த போது சந்தேகநபர் மதுபானப் போத்தல் ஒன்றைக் கோரியுள்ளார்.
அதனை வழங்கும் வரை முறைப்பாட்டாளரின் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக வழங்கப்பட்டிருந்த கடிதத்தை தன்வசம் வைத்துக்கொண்டு நேற்று குறித்த மதுபானப் போத்தலை இலஞ்சமாகப் பெற முயன்றுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள மூடியிருந்த கட்டிடமொன்றிற்கு அண்மையில் வைத்து இலஞ்ச ஊழல் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார் சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments