ஜம்மு காஷ்மீரின் புல்மாவாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இன்று அவந்திப்போரா பகுதியில் என்கவுன்டர் நடக்கிறது எனவும்.
புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நதிர் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
2வது நாளாக நீடித்து வரும் இந்த மோதலின் போது மேலும் ஒரு பயங்கரவாதி என்கவுன்டர் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அவந்திபோரா பகுதியில் உள்ள நடேர் டிரால் பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டர் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments