Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல்!

ரஷ்யா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டு களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் ரஷ்யா -உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை துருக்கியில் நடந்துள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்கு தல்களை நடத்தியது. நகரின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் மக்கள் நிலத்தடி சுரங்கப்பாதை நிலையங்ளில் தஞ்சமடைந்தனர். கீவ்வின் ஒபோலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது டிரோன் விழுந்து வெடித்தது.

சோலோமியன்ஸ்கி மாவட்டத்தில் 2 இடங்களில் தாக்குதல் காரணமாக பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துருக்கியில் நடந்த நேரடி பேச்சு வார்த்தையின்போது ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்பு கொண்டன. அதன்படி முதல் கட்டமாக கைதிகள் பரிமாற்றம் வடக்கு உக்ரைனில் உள்ள பெலாரஸ் எல்லையில் நடந்தது. இதில் இரு தரப்பில் இருந்தும் தலா 390 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறும்போது, முதல் கட்டமாக 390 உக்ரேனியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். வார இறுதியில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள். இது போரின் மிகப்பெரிய பரிமாற்றமாக மாறும் எனவும் கூறினார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...