Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

50 பேரிடம் பொய் கண்டறியும் சோதனை கசிந்த ரகசிய தகவல்கள் !

அமெரிக்க இராணுவத்தின் கூட்டு தலைமைப் பணியகத்தில் (Joint Staff) பணியாற்றும் சுமார் 50 பேரிடம் பொய் கண்டறியும் சோதனை (Polygraph test) நடத்தப்பட்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்கள் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் வெடிமருந்துகள் மற்றும் ஆயுத கையிருப்புகள் குறைந்து வருவது தொடர்பான ரகசிய தகவல்கள் செய்தியாளர்களுக்கு கசியவிடப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த பொய் கண்டறியும் சோதனைகளுக்கு முன்னதாக, அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் Patriot வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களின் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அமெரிக்க அதிகாரிகள் அந்த தகவல்களை மறுத்ததுடன், நாட்டின் ஆயுதக் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் Sean Parnell, உள்துறை நிர்வாக அல்லது விசாரணை நடவடிக்கைகள் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்தார். அதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் கசிவதை அமெரிக்க பாதுகாப்புத் துறை “மிகவும் தீவிரமான விஷயமாக” கருதுவதாகவும், அதுகுறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவத்தின் Joint Staff அமைப்பில் சுமார் 1,500 முதல் 2,000 வரையான இராணுவ மற்றும் சிவில் பணியாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து, இராணுவத் திட்டமிடல், கொள்கை மற்றும் போர்த் தந்திரங்களை ஒருங்கிணைப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...