ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘கபார் ஃபூரி’ (Khabar Fouri) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறித்த எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது அமெரிக்கா நான்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் கார்க் தீவு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் வரை இந்தத் தீவு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.






3 Comments