ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியதாகவும் பெரும்பாலானவை இடைமறித்து வீழ்த்தப்பட்டதாகவும்.
பதிலடி தரும் வகையில் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது அடுத்தடுத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சமாளிக்க முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறியதாகவும் அடுத்தடுத்து வந்த ஏவுகணைகள் குடியிருப்புகள் கடைகள் மீது விழுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு.
ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசப்பட்டதை அடுத்து கீவ் நகரம் முழுதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும்.
குடியிருப்பு வாசிகள் அனைவரும் பதுங்கு குழிகளிலும் நிலத்தடி சுரங்கப் பாதைகளிலும் தஞ்சம் அடைந்தனர் ஏழு மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தாக்குதலால் நகரெங்கும் பதற்றம் நிலவியதாகவும்.
தாக்குதலில் ஆறு பேர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிற நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் கூறியுள்ளது.
போர் நிறுத்தத்தின் அறிகுறியாக இரு தரப்பிலும் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் தாக்குதல் துவங்கியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments