Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

அமெரிக்காவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: 6 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலைசெய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் அமெரிக்கா வாழ் இஸ்ரேலியர்கள், யூதர்கள், இஸ்ரேல் ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றனர்.பேரணியின்போது திடீரென பெட்ரோல் குண்டுகளுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பற்றி எரிந்தன. இதில் பேரணியில் பங்கேற்ற 6 பேர் படுகாயமடைந்தனர்.'பாலஸ்தீனம் விடுதலை' என்ற கோஷம் எழுப்பிய நபர் இந்த தாக்குதலை நடத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ளமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய முகமது சுலைமான் (வயது 45) என்ற நபரை கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...