Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸிற்கு முக்கிய பொறுப்பு!

1980ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச்சைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், டிசம்பர் 2018-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். கோவிட்-19 தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கித் இயக்குநராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஸ் பத்திரிகை, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவரை உலகளவில் சிறந்த மூன்று மத்திய வங்கி தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது. குறிப்பாக, குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டு 2024 இல் சக்திகாந்த தாஸ் 'A+' மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சித் துறை (DoPT) சனிக்கிழமை பிறப்பித்தது. பி.கே. மிஸ்ரா செப்டம்பர் 11, 2019 முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...