Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்ய இருக்கிறார்.

இதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷூ சுக்லா கூறும்போது, 'ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன்.


விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை,இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக உள்ளது. விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள்,ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்த பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல,கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச்செல்கிறேன்.

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவு கடந்த 1984-ம் ஆண்டு ரஷியாவின் சோயுஸில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார்.அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஒரு சிறப்பான பரிசை விண்வெளிக்கு எடுத்து செல்கிறேன். அங்கிருந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பிய உடன் அவரை நேரில் நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் அந்த பரிசை ஒப்படைப்பேன்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளை சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் போன்ற இனிப்புகளை எடுத்துச்செல்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...