அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை லண்டனுக்கு புறப்பட்ட போயிங் விமானம் சில நிமிடங்களில் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து விபத்துக்குள்ளான நிலையில்.
இந்த பயங்கர விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி தவிர விமானத்தில் இருந்து 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் விமானம் வெடித்து சிதறியதால் பிஜே அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும்.
பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டதோடு அவர்களில் 33 பேர் உயிரிழந்தனர் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாகவும்.
இறந்த 33 பேரில் பெரும்பாலானவர்கள் பிஜே மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் சிலரை கடந்த 2 நாட்களாக காணவில்லை எனவும் அவர்கள் குறித்த தகவல்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர் என்பதோடு அவர்களும் விமான விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிற நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.






3 Comments