டெல் அவிவ் ஹைஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட இஸ்ரேல் முழுவதும் பல இடங்களில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் இரண்டு இலங்கைப் பெண்கள் காயமடைந்ததாகவும்.
டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண் அதிகாலை 03:30 மணியளவில் வீட்டை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதை அடுத்து தனது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டார் எனவும்.
பேட் யாமில் அதிகாலை 04:00 மணியளவில் நடந்த ஒரு தனி சம்பவத்தில் மற்றொரு இலங்கைப் பெண்ணின் வலது கையில் கண்ணாடி விழுந்ததால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார காயமடைந்த நபருடன் நேரில் பேசியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள் பரவலான சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பல கட்டிடங்கள் தீப்பிடித்ததோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மரணம் மற்றும் பல காயங்களை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிற நிலையில் மேலும் நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments