Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அணு ஆயுத கையிருப்பை அதிகரித்து வரும் இந்தியா!

இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளதாகவும் இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது எனவும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரித்து மேலும் அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும்.

புது வகையான அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடர்ந்து இந்தியா உருவாக்கி உள்ளது இதன்மூலம் அணு ஆயுத திறனில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது எனவும் பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில் சீனாவிடம் 600 ஆயுதங்கள் உள்ளதாகவும்.

சீனா 2023 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது எனவும்.

அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா பாகிஸ்தான் இடையே சமீபத்தில் சண்டை நடைபெற்றது இதுபோன்ற சூழலில் இரு பக்கத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளதோடு.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ள நிலையில் இந்த 9 நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரிக்கவும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவும் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...