அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது இதில்1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால் இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருவதாகவும்.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசிய நிலையில் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளதாகவும் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு.
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம் வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்த நிலையில் 11 பேர் காயம் அடைந்ததோடு.
சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






3 Comments