ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதோடு.
ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே10 நாட்களாக சண்டை இடம்பெற்று வரும் நிலையில் இரு நாடுகளிலும் உள்ள வெளிநாட்டவர்கள் அவசரமாக சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர் எனவும்.
அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் முற்றிலுமாக கைவிடாத வரையில் போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்கியுள்ள நிலையில்.
மூன்று முதன்மையான அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மூன்று நிலையங்களும் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார் இஸ்ரேலின் நீண்ட கால எதிரியான ஈரானுக்கு ஆதரவாக இருந்து வரும் ரஷ்யா, சீனா, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவை பலமாக கண்டித்துள்ள நிலையில்.
ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதோடு ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதோடு இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






3 Comments