திங்கட்கிழமை இரவு மத்திய கிழக்கில் வான் பயணத்தில் ஏற்பட்ட சமீபத்திய பெரும் இடையூறாக கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்ட் இராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கத்தார் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியதால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் புதிய உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வளைகுடா பகுதி பல அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள நிலையில்.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி தெரிவிக்கையில் ஈரானிய புரட்சிகர காவல்படையால் அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனவும்.
இது கத்தார் நாட்டின் இறையாண்மை மற்றும் வான்பரப்பு மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலாக நாங்கள் கருதுகிறோம் என்றும் பதட்டங்கள் அதிகரித்ததையடுத்து,l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடிய நிலையில்.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பல சர்வதேச விமானங்கள் திசை திருப்பப்பட்டதோடு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மூடல் இடம்பெற்றுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.
குடிமக்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் பரவலான வான்பரப்பு மூடல்கள் மத்திய கிழக்கு முழுவதும் வர்த்தக விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதோடு இதனால் பல விமான ரத்துகள்,திசை திருப்பல்கள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments