Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் வழமைக்கு!

2025 ஜூன் 24 அதிகாலையில், கத்தார் நாட்டின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் தனது விமான சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளதோடு கத்தாரில் உள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை அடுத்து தற்காலிகமாக வான்பரப்பு மூடப்பட்டிருந்த நிலையில்.

கத்தார் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கத்தார் நாட்டின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதை கத்தார் ஏர்வேஸ் உறுதிப்படுத்தியதோடு.

இந்த நேரத்தில் எங்கள் கவனம் பயணிகளை பாதுகாப்பாக வீடு திரும்ப உதவுவதிலோ அல்லது அவர்களின் தொடர் பயணத்தை பாதுகாப்பாகவும் சீராகவும் மேற்கொள்வதிலோ உள்ளது என்றும்.

விமான நிறுவனம் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தவரை விரைவாக செயல்பாடுகளை மீட்டெடுக்க. பணியாற்றி வருகிறது என்று பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ கத்தார் ஏர்வேஸ் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலும் பிற முக்கிய விமான நிலையங்களிலும் கூடுதல் தரை ஊழியர்களை நியமித்துள்ளது இடையூறுகளைக் குறைத்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உச்சபட்ச கவனிப்பையும் ஆதரவையும் வழங்குவதாகவும்.

செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் நிலையில் விமான அட்டவணையில் கணிசமான தாமதங்கள் ஏற்படும் என்று விமான நிறுவனம் எதிர்பார்க்கின்ற நிலையில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன்னதாக qatarairways.com அல்லது கத்தார் ஏர்வேஸ் மொபைல் செயலியைப் பயன்படுத்தி உண்மையான நேர புதுப்பிப்புகளை சரிபார்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமான தாக்குத...

காஸா மீதான போரின்போது கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை பெருமையுடன் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் ஒரு “விரோத நாடு” என்றும், இஸ்ரேலின் கொள்கைகளை அந்நாடு தீ...

யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல முனைகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக தாயிஸ் மற்றும் ஹொதைதா மாகாணங்களிலும், ...